மாற்றுத்திறனாளிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாநாடு
தஞ்சாவூர், ஆக. 10- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே உள்ள இரண்டாம்புளிக்காட்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின், சேதுபாவாசத்திரம் ஒன்றிய 2 ஆவது மாநாடு ஒன்றியத் தலைவர் எஸ்.ஜே. ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெ.முஜீப் ரஹ்மான் கொடியேற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.அய்யாசாமி வரவேற்றார். பி.ஜோதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.மேனகா வேலை அறிக்கையும், பொருளாளர் ஐ.அந்தோணியம்மாள் வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ. சந்திரபிரகாஷ், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கர்த்தர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், ஒன்றியத் தலைவராக ராஜேஷ்கண்ணா, செயலாளராக ஏ.மேனகா, பொருளாளராக எஸ். லித்தீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை உள்ள டக்கிய 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.6 ஆயி ரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணிநேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.