tamilnadu

செப். 30 பி. சீனிவாசராவ் நினைவு நாள் நிலவுரிமை போராட்டத்தில் முதல் வெற்றி

செப். 30 - பி. சீனிவாசராவ் நினைவு நாள்  நிலவுரிமை போராட்டத்தில் முதல் வெற்றி!

ஆக்கிரமிப்பை அகற்றி, பட்டா வழங்க வட்டாட்சியர் ஒப்புதல்

தென்காசி, செப். 29 - தோழர் பி. சீனிவாசராவ் நினைவு  தினத்தையொட்டி, சங்கரன்கோவில் அருகே பனையூரில் அறிவிக்கப் பட்டிருந்த நிலவுரிமைப் போராட்டத் திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.  தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், பனையூர் கிராம நத்தம் புல எண். 677/4- அரசுப் புறம் போக்கு நிலத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வந்தார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி,  வீடில்லாத பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  கடந்த நான்கு மாதங்களாக அரசுத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.  இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுவுடமை இயக்கத் தலை வர் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு நாளான செப்டம்பர் 30 அன்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில், “3.10.2025 அன்று  அளவீடு செய்து ஆக்கிரமிப்பினை அகற்றி, வீடில்லா பனையூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு 3 மாத காலத்திற்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்” என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பனையூர் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி பயனாளி களுக்கு பட்டா வழங்கிட வட்டாட்சியர் எழுத்துப் பூர்வமாக ஒப்புதலளித்தார்.  கிராம நிர்வாக அலுவலர், கரிவலம் வந்தநல்லூர் வருவாய் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் முன்னிலை யில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பா.அசோக்ராஜ், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் உ. முத்துபாண்டியன், சங்கரன்கோவில் வட்டாரச் செயலா ளர் பி. கிருஷ்ணமூர்த்தி, வாசுதேவ நல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா. நட ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.