மூத்த தலைவர் வே. மீனாட்சிசுந்தரத்திற்கு ‘அகவை 90’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. மீனாட்சிசுந்தரம், சனிக்கிழமையன்று 90-ஆவது அகவையை எட்டினார். இதையொட்டி, மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் வே. ராஜசேகரன் உள்ளிட்டோர் வே. மீனாட்சிசுந்தரத்தின் இல்லத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். திருச்சியில் இருந்து, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.