tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மீனவர் சங்க கிளை அமைப்பு

சென்னை, அக்.17- தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) போரூர் கிளை அமைப்புக்கூட்டம் வெள்ளியன்று (அக்.17) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கே.அஞ்சலி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன், துணைத்தலைவர் ஆர்.லோகநாதன், மதுரவாயல் பகுதி சிஐடியு துணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக கே.அஞ்சலி, செயலாளராக எம்.குமார், பொருளாளராக கே.சந்திரசேகர் ஆகியோர்

தேர்வு செய்யப்பட்டனர்.  சென்னை கோட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 ரயில்வே போலீசார்

சென்னை, அக்.17- தீபாவளியை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் 800 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ரயில் நிலையங்களில் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகள் சோதிக்கப்படுகின்றன. ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களின் பணியாளர்கள் அக்டோபர் 18 முதல் 22ஆம் தேதி வரை தொடர் பணியில் ஈடுபடுவர். கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு ஊர்திகளும், 50 தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 2,705 இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9,207 கடைகளுக்கும், சென்னையில் 1,088 கடைகளுக்கும் பட்டாசு விற்பனைக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு விமான டிக்கெட்  விலை கடும் உயர்வு

சென்னை, அக். 17– தீபாவளியை முன்னிட்டு விமான டிக்கெட் விலை மூன்று முதல் நான்கு மடங்கு வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ரயிலில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காமல் தவித்த நிலையில், ஆம்னி பேருந்து கட்டணமும் விமான டிக்கெட் அளவுக்கு உயர்ந்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு சென்னை-மதுரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129-லிருந்து ரூ.17,683 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.3,608-லிருந்து ரூ.15,233 ஆகவும், சென்னை-கோவை ரூ.4,351-லிருந்து ரூ.17,158 ஆகவும் உயர்ந்துள்ளது. வடமாநிலங்களுக்கு சென்னை-தில்லி ரூ.5,933-லிருந்து ரூ.30,414 ஆகவும், சென்னை-மும்பை ரூ.3,356-லிருந்து ரூ.21,960 ஆகவும், சென்னை-கொல்கத்தா ரூ.5,293-லிருந்து ரூ.22,169 ஆகவும் உயர்ந்துள்ளது.

சென்னை பெரும்பாக்கம் மேம்பாலத்தின் ஒரு பாதி திறப்பு

சென்னை, அக்.17- சென்னை பெரும்பாக்கம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பா லத்தின் ஒரு பாதி திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் ஏரியில் இருந்து ஓக்கியம் மடுவுக்கு வெள்ளக்காலங்களில் உபரி நீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறையால் இந்த மேம்பாலம் கட்டப்படு கிறது. சோலிங்கநல்லூர் மற்றும் மேட வாக்கம் இடையே பயணிப்பவர்கள் தற்போது மேம்பாலத்தின் ஒரு பாதியில் பயணிக்கின்றனர். இரு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் இந்த ஒரு பகுதி யிலேயே பயணிக்கின்றன. மற்ற பாதி யின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. தற்போதுள்ள பழைய கல்வெர்ட் மிகவும் குறுகலாக இருப்பதால், அதிக அளவு வெள்ள நீரை வெளியேற்ற முடிய வில்லை. எனவே, இந்த புதிய மேம்பாலம் பழைய கல்வெட்டுக்கு மாற்றாக கட்டப்படு கிறது. அக்டோபர் 10 அன்று பழைய கல்வெட்டின் மீதமுள்ள பகுதி உடைத்து அகற்றப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் உதவிப் பொறியாளர் கூறுகையில், தற்போதுள்ள வசதிகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கூடுதல் நடவடிக்கைகள் வடகிழக்கு பருவ மழையின் சவால்களை சமாளிக்க போது மானதாக இருக்கும் என்றார். இந்த மேம்பாலம் பெரும்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ள அபா யத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.