tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

 அவலம்  

பட்டியல் இன அரசியல்வாதிகள் பொதுத் தொகுதிகளில் போட்டி யிடுவது பெரும் அளவில் அதி கரிக்கவில்லை என்று பீகார் தேர்தல்கள் பற்றிய ஆய்வு குறிப்பிடுகிறது. அம்மாநிலத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நடந்துள்ள தேர்தல்களில் பொதுத்தொகுதிகளில் போட்டியிட்ட பட்டியலின வேட்பாளர்கள் ஐந்து  முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் கூட மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வில்லை. ஐந்து முறை வெற்றி பெற்றவர்களி லும் ஒருவர் கூட பாஜககாரர் கிடையாது. பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தவரை நிறுத்தும் வழக்கம் அக்கட்சிக்கு பெரும்பாலும் இல்லை  என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார் கள். உயர் சமூகம் என்று கருதப்படுபவர்களுக்கே பாஜக வாய்ப்புகளைத் தருகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகள்தான் பொதுத்தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன.

 அலறல்

 மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்த லில் கூட்டாக நின்றே ஆக வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அலறி வருகிறது. மாநிலத்தில் அதிகாரத்தைப் பெற்று விட்டதால், அதை வைத்து உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று பாஜக கருதுகிறது. இதனால் மாநிலம்  முழுவதும் கூட்டணி வைக்காமல் போட்டியிட லாம் என்று நினைக்கிறார்கள். மும்பை மாநக ராட்சியில் மட்டும் கூட்டணி இருந்தால் போதும் என்பதுதான் பாஜகவின் கணக்காகும். பாஜக வின் உத்தியால் ஏற்கனவே அதிகாரத்தை இழந்துவிட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளவே கூட்டணி தேவை என்று ஏக்நாத் ஷிண்டே பதறுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேதம் எதுவும் இல்லாமல், கூடுதலாக மும்பையில் ராஜ் தாக்கரேயும் கைகோர்க்க தயாராக இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேயின் பதற்றம் அதிகரித்துள்ளது.

சரிவு  

அடுத்த நிதியாண்டில் இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறையும்  என்று மதிப்பிடப்படுகிறது. சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) தனது மதிப்பீட்டை வெளி யிட்டுள்ளது. ஏற்கனவே 6.4 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருந்த நிதியம்  தற்போது 6.2 விழுக்காடுதான் இருக்கும் என்கிறது. உலக வங்கியும் தனது மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவிற்கான மதிப்பீடு குறையவில்லை. அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டாலும், ஐரோப்பிய நாடுகளுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான ஏற்றுமதியை அதிகரித்து சரிசெய்துள்ளார்கள் என்று அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா நிறை வேற்றாவிட்டால் மேலும் சரிவடையும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகரிப்பு  

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதற்கு எதி ரான நடவடிக்கைகளில் இந்தியாவின் வீரர்க ளும், எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களும் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். சில நாட் களுக்கு முன்பாக இரண்டு கமாண்டோக்களை இந்தியா இழந்தது. அக்டோபர் 15 அன்று அதி காலையில் ஊடுருவல் முயற்சி நடந்திருக் கிறது. ராணுவமும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை யும் இணைந்து தேடுதல் வேட்டையை நடத்தின தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இரண்டு தீவிரவாதிகளை கூட்டுப்படைகள் சுட்டுக் கொன்றன. தேடுதல் பணி தொடர்கி றது. 2019 முதல் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் ஒன்றிய அரசாங்கத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்பாட்டிற்குப் பிறகு தான் தீவிரவாத நடவடிக்கைகள் முன்பை விட அதிகரித்துள்ளன.