ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு மறுதேர்வுக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை!
சென்னை, ஆக. 16 - தெற்கு ரயில்வே நடத்திய தேர்வில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தேர்வுகளை பொறுத்தவரை ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால் ஆகஸ்ட் 10 அன்று இள நிலை பொறியாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் கேள்வித்தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தரப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரி வித்து தமது சமூகவலை தள பக்கத்தில், சு. வெங்கடேசன் எம்.பி. கூறி யிருப்பதாவது: “தெற்கு ரயில்வேயால் நடத்தப்படுகிற இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழி களில் கேள்வித்தாள் தரப்பட வேண்டும் என்பது விதி முறை. ஆனால் தமிழ் மொழி யில் கேள்வித்தாள் இல்லாம லேயே தேர்வு நடைபெற்றி ருக்கிறது. இந்தித் திணி ப்பும், தமிழ் ஒழிப்பும் ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக் கின்றன. எனவே நடத்தப் பட்ட தேர்வை ரத்து செய்து தமிழ் மொழியில் கேள்வித்தாள் கொடுத்து மீண்டும் தேர்வை நடத் துங்கள்!” என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச் சர் அஸ்வினி குமார் வைஷ்ணவிற்கு கடிதம் ஒன்றையும் சு. வெங்கடே சன் எம்.பி. எழுதியுள்ளார். இந்தி திணிப்பு குறித்து மற்றொரு பதிவிலும், “இந்தி விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத் துவதில் ரயில்வே துறைக்கு ஏன் இந்த ஆனந்தம்?” எனவும், “ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது” என வும் கடுமையாக சாடி யுள்ளார்