tamilnadu

img

வாக்குத் திருட்டுக்கு அடுத்து தலா ரூ.10 ஆயிரம் நிதி பீகார் மக்களை ஏமாற்றும் பாஜக முயற்சி பலிக்காது

வாக்குத் திருட்டுக்கு அடுத்து தலா ரூ.10 ஆயிரம் நிதி பீகார் மக்களை ஏமாற்றும் பாஜக முயற்சி பலிக்காது

கே. பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை, செப். 27 - மோடியும் - நிதிஷ்குமாரும் எத்த னையோ மோசடி வித்தைகளை அரங்கேற்றி னாலும், அவர்களைப் பீகார் மக்கள் தோற் கடிக்கப் போவது உறுதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “பீகார் மாநிலத்தில் வெகு சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலை யில், அங்குள்ள பெண்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ரூ. 7500 கோடி செலவில் தொடங்கி வைத்திருக் கிறார் பிரதமர் மோடி.  இந்தத் திட்டம், பெண்கள் மீதான அக்கறையில் எழுந்ததல்ல! மாறாக, தேர்த லில் அடையப்போகும் படுதோல்வியை உணர்ந்ததால் உருவானது.  ஏற்கெனவே, பீகா ரில் செயல்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நட வடிக்கையில் லட்சக் கணக்கான வாக்கா ளர்கள், அதிலும் குறிப் பாக ஏழைகள், பெண் களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக கடுமையான கொதிப்பு அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகளை திருடக்கூடிய இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் அம்பல மான பின்னணியில், இப்போது வேறு விதத்தில் மக்களை ஏமாற்ற முடியுமா என்று மோடி - நிதீஷ் கூட்டணி களமிறங்கியுள்ளது.  ஆனால் இதுபோன்ற வித்தைகள் செல்லாது. விரைவில் பீகார் மக்கள் பாஜக ஆட்சியின் தகிடுதத்தங்களை உடைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்”  இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.