விசாரணை அதிகாரியை மாற்ற ரிதன்யாவின் தந்தை கோரிக்கை
கோயம்புத்தூர், ஜூலை 12- இளம்பெண் ரிதன்யா வரதட்ச ணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், விசா ரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணா துரை மேற்கு மண்டல ஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, “வழக்கு தொய்வாக போகின்றது என்பதால் மனு கொடுக்க வந்து இருக்கின்றேன். ஆடியோ ஆதா ரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவு களை சேர்க்கவில்லை. சாதாரண தற்கொலை வழக்கு, கொடுமை வழக்காக போட்டு இருக்கின்றனர். சரியான பிரிவுகளை சேர்த்து குற்ற வாளிகளுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். உரிய நட வடிக்கைகள் எடுப்பதாக ஐ.ஜி தெரி வித்து இருக்கிறார்” என்றார். “இன்னும் பரிசோதனை அறிக்கை கள் வரவில்லை என அதிகாரிகள் தெரி வித்தனர். விசாரணை அதிகாரி மேல் சந்தேகம் வருகிறது. அதனால் தனி விசா ரணை அதிகாரி வேண்டும்” என கேட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணாதுரையின் வழக்கறிஞர் குப்புராஜ் கூறுகையில், “பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்ற பல சட்டப்பிரிவுகளை காவல் துறையினர் சேர்க்கவில்லை. எனவே, கூடுதல் வழக்கு பிரிவுகளை சேர்க்க வேண்டும் என மனுவை கொடுத்து இருக்கின்றோம்” என்றார்.