tamilnadu

img

பிளக்ஸ் பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

பிளக்ஸ் பேனர்களால்  விபத்துகள்  ஏற்படும் அபாயம்

பொன்னமராவதி, ஜூலை 29-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு நிகழ்வு மற்றும் விளம்பரம் தொடர்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.  திங்களன்று பயங்கர காற்று வீசியது. அப்போது புவனேஸ்வரி திருமண மஹால் எதிரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று, காற்றில் சாய்ந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் மீது விழாமல், காரின் மீது சாய்ந்து விழுந்தது. இதுபோல், பல்வேறு விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.