tamilnadu

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!

சிபிஎம் மாநிலக் குழு வலியுறுத்தல்

சிபிஎம் மாநிலக் குழு வலியுறுத்தல் கோவில்பட்டி, செப்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற் குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய  குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே. பாலபாரதி,  மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலா ளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்:  வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக! இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரி யானா, பஞ்சாப், புதுதில்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்த கனமழை, மேகவெடிப்பு காரணமாக அதிகமான உயிரிழப்பு களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.  தமிழகத்தில் கனமழையோ, மேகவெடிப்போ ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகை யில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்க  வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கனமழை யினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகை யில் மழைநீர் வடிகால், கால்வாய் பணிகளை விரைவில் முடித்தல், ஏரி-குளங்களை தூர்வாரு தல், மழை நீர் தேங்கும் போது உடனுக்குடன் நீரை வெளியேற்றுவதற்கான மின் மோட்டார் உள்ளிட்ட ஏற்பாடுகள், ஆகாய தாமரை அகற்று தல், வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு  பணிகள், படகுகள் உள்ளிட்டவற்றை தயார் நிலை யில் வைத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்துவதை கைவிடுக! தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களி லும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம்  பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக் கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.  இந்த  நிலையில் தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் களை நியமிக்க ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்ப ரேசன் லிமிட்டெட் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) என்ற நிறுவனத்தை உரு வாக்கியுள்ளது.   இந்நிறுவனத்தின் மூலம் அலுவலக பணி யாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர், தட்டச்சர், கணக்குப் பணியாளர்கள், மேலாளர் உள்ளிட்ட 22 பணிகளுக்கு தொகுப்பூதியம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை சேர்த்து மாதாந்திர சம்பளமாக குறைந்த ஊதியம் நிர்ண யம் செய்யப்பட்டு, அரசின் அனைத்து துறைகளி லும் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிரந்தரத்தன்மை உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஒப்பந்த தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 தெளிவாக கூறு வதை, சட்டம் இயற்றிய மாநில அரசே மீறுவது இயற்கை நீதிக்கு எதிரானது. அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை, தமிழக அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நியமனம் செய்தால் இட ஒதுக்கீடும், சமூக  நீதியும் பாதுகாக்கப்படும். ஆனால், இதுபோன்ற  ஏஜென்சிகளை உருவாக்கி நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறையை  புகுத்துகிறபோது, பணிப் பாது காப்பு, சமூக பாதுகாப்பான ஓய்வூதியம், ஆண்டு  உயர்வு, பதவி உயர்வு என அனைத்தும் பறி போகும். இட ஒதுக்கீடும் கேள்விக்குறியாகும். ஏற்கனவே அரசுத் துறையில் தொகுப்பூதியம்,  மதிப்பூதியம், தினக்கூலி, காண்ட்ராக்ட் முறை களில் பல்லாண்டுகளாக பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென  தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக தமிழக அரசு மீண்டும் ஒப்பந்த முறையை திணிப் பது, தொழிலாளர்கள் - இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கும் என்பதை சிபிஐ(எம்) சுட்டிக் காட்டுகிறது.  எனவே, திமுக அரசு 2021 இல் வெளியிட்ட  தேர்தல் அறிக்கை எண்.153 இல் தெரிவித்துள்ள வாறு மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பல ஆண்டு களாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப்  பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் மூலம் பணியாளர்களை அரசுத் துறை களில் நியமிப்பது என்ற அரசாணையை உடனடி யாக கைவிட வேண்டுமெனவும், காலிப் பணி யிடங்களை நிரந்தரப் பணி அடிப்படையில் பூர்த்தி  செய்திட வேண்டுமெனவும் சிபிஐ(எம்) தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக! தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தேவை, பணிச்சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம்  வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர் என்ற அடிப்படையில் தொழிலாளர் சட்டங்கள் வரையறுத்துள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை கள் 10, 139, 152 ஆகியவற்றை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்பு களில் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வெகு மக்களின் கோரிக்கையாக, உருவெடுத்து உள்ள  சூழலில் தமிழ்நாடு அரசு இதை உரிய வகை யில் நடைமுறைப்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்தை, தூய்மைப் பணியை இயந்திரமயமாக்குவது, நவீனமயமாக்கும் வகை யில் அரசு பொறியியல் கல்லூரிகளில் சுகாதார பொறியியல் துறை பாடப்பிரிவு (சானிட்டரி இன்ஜி னியரிங்) உருவாக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் தூய்மை பணித்துறையில் நடை முறைப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்ப செயல் பாடுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த உரிய  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளது.