tamilnadu

img

அரசுப் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

அரசு பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திண்டிவனம் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 36 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
போலீஸ் தகவலின்படி, கண்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரை உடைத்து எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியுள்ளது
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.