tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களின் நெகிழ்ச்சி

சுமைப்பணி தொழிலாளர்களின் நெகிழ்ச்சி

நாமக்கல், ஜூலை 14 – தொழிலாளி ஒருவர் ரூ.50 ஆயிரம் பணம்  மற்றும் செல்போனை தவறவிட்ட நிலையில்,  அதனை பத்திரமாக எடுத்து போலீசார் முன்னி லையில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒப் படைத்தனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த  தொழிலாளி சண்முகசுந்தரம். இவர் ஞாயி றன்று மாலை திருச்செங்கோடு சாலையில்  உள்ள மதுபானக் கடையில் அளவுக்கு அதிக மாக மது அருந்திவிட்டு, வெளியே வந்து சாலையின் ஓரத்தில் உறங்கியுள்ளார். இதனிடையே, சாலை ஓரத்தில், உடைகள், அடையாள அட்டைகள், ரூ.28,000  ரொக்கப் பணம், புதிதாக வாங்கிய ரூ.25,000  மதிப்புள்ள செல்போன் மற்றும் பாதி குடித்த  மது பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் கிடப் பதைக் கண்ட அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் பார்த்தனர். இதனை எடுத்து  பத்திரப்படுத்தி, திங்களன்று காலை பள்ளி பாளையம் காவல் நிலையத்திற்கு செய்று  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சண்முகசுந்த ரத்தை வரவழைத்து பணம், செல்போன் மற் றும் அவரது உடைமைகள் அனைத்தும்  அவரிடமே, சுமைப்பணி தொழிலாளர்கள் ஒப் படைத்தனர். பணத்தையும் உடைமைகளை யும் பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரம்  அனைவருக்கும் நன்றி தெரிவித்து சென் றார். முதுகு தண்டு உடைய, மூட்டை தூக்கி பத்து, பத்தாய் சேர்க்கும் சுமைப்பணி தொழி லாளர்கள், யாரும் உரிமை கோராத பணம்  தெருவில் கிடைத்தும், நாணயமாக எடுத்து அதனை உரியவரிடம் சேர்த்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.