tamilnadu

img

திருவெள்ளறையில் ஆரம்ப சுகாதார நிலையப் பணியை மீண்டும் துவங்க கோரிக்கை

திருவெள்ளறையில் ஆரம்ப சுகாதார நிலையப்  பணியை மீண்டும் துவங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக். 12-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட மண்ணச்சநல்லூர் ஒன்றிய 5 ஆவது மாநாடு சா. அய்யம்பாளையத்தில் நடைபெற்றது.  மாநாட்டு கொடியை மூத்த தோழர் செல்லபெருமாள் ஏற்றினார். மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை சங்க செயலாளர் முருகேசன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் சுந்தர் சமர்ப்பித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நல அமைப்பு முன்னாள் நிர்வாகி முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 50 வருடத்திற்கும் மேல் ஆகியும் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். காவேரி - அய்யாறு மற்றும் உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு நீர்வழி இணைப்பை செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெள்ளறையில் ஆரம்ப சுகாதார நிலையப் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் புதிய தலைவராக வி. மனோகரன், செயலாளராக எஸ். முருகேசன், பொருளாளராக டி.சிவக்குமார் மற்றும் இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு இணைச் செயலாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் நடராஜன் நிறைவுரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் செல்லப்பெருமாள் நன்றி கூறினார்.