நிர்ணயித்த தினக்கூலி ரூ.760-ஐ ஊதியமாக வழங்க கோரிக்கைக
ரூர், செப்.3 - கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி யில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் களுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் மலக்கழிவு பொருட்களை பொது குப்பைகளோடு கொடுப்பதை நக ராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த குப்பை வண்டிகள் பழுது நீக்கி வழங்கப்பட வேண்டும். பணியாளர் களுக்கு குப்பை அள்ளும் பணியை தவிர, வேறு பணிகள் செய்ய வற்புறுத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலி ரூ.760-ஐ ஊதியமாக வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை விடு முறை வழங்க வேண்டும். மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன், மாவட்டத் தலைவர் சி.ஆர்.ராஜா முகமது, மாவட்டப் பொருளாளர் கே.வி. கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம். ஆறுமுகம் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் எம்.காந்தி, பி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.