tamilnadu

img

41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க கோரிக்கை

41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக  முறைப்படுத்தி ஆணை வழங்க கோரிக்கை

பெரம்பலூர், செப்.27- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்  பணியாளர் சங்கத்தின் ஒன்பதாவது கோட்ட மாநாடு பெரம்பலூரில் சனிக்கிழமை நடை பெற்றது. கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை  வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கோட்டை துணைத் தலைவர் பால சுப்பிர மணியன் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயல் அறிக்கையை கோட்டச் செயலாளர் சி. சுப்பிர மணியன் மற்றும் வரவு-செலவு அறிக்கையை  கோட்டப் பொருளாளர் மார்க்கண்டன் ஆகி யோர் வாசித்தனர். மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மாநாட்டின் கோரிக்கைகள் குறித்து சிறப்பு ரையாற்றினார். பொதுச் செயலாளர் அம்ச ராஜ் நிறைவுரையாற்றினார். முன்னாள் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார். சாலைப் பணியாளர்களின் 41 மாத  பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற  ஆணையின்படி பணிக் காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்து,  நெடுஞ்சாலைகளை தமிழக அரசே ஏற்று  நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர் களுக்கு சாலைப் பணியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் மற்றும் பணிக் காலத்தில் உயிர்நீத்த சாலைப்  பணியாளர் குடும்பத்திலிருந்து, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரி  விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அனை வருக்கும் விரைந்து பணி வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்டத் தலைவராக ராஜ்குமார், செய லாளராக சி. சுப்பிரமணியன், பொருளாள ராக மார்க்கண்டன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.