tamilnadu

img

மக்கள் கூடும் இடங்களில் உள்ள மது கடைகளை அகற்றுக! மாதர் சங்க கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

மக்கள் கூடும் இடங்களில் உள்ள மது கடைகளை அகற்றுக! மாதர் சங்க கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

கரூர், ஆக.16 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சசிகலா தலைமை  வகித்தார். சங்க உறுப்பினர் சுமதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ரஞ்சிதா  வரவேற்று பேசினார். மாதர் சங்க மாநில  பொதுச் செயலாளர் ராதிகா மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகலா வேலை யறிக்கையை முன்வைத்தார். மாவட்டத் தலைவராக சசிகலா,  செயலாளராக ரஞ்சிதா, பொருளாள ராக இந்துமதி உட்பட 11 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. மாநிலச் செயலாளர் லட்சுமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களில் சம  வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் கூடுகிற இடங்களில்  அமைந்துள்ள மதுபானக் கடைகளை அரசு மூட வேண்டும். முக்கிய வழித்தடங் களில் காலை-மாலை வேளையில் மகளிர் பேருந்து இயக்க வேண்டும். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையையும், பெண்க ளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.