tamilnadu

img

சட்டவிரோத சாயப் பட்டறைகள் அகற்றம்

சட்டவிரோத சாயப் பட்டறைகள் அகற்றம்

ஈரோடு, செப். 3- பவானி பகுதியில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் வெளியேற்றி வந்த  சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், பவானி வட்டம்,  சேர்வராயன்பாளையம், அத்தாணி மெயின் ரோடு பகுதியில் சாயப்பட்டறை களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து  புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆட்சி யர் ச.கந்தசாமி உத்தரவின் பேரில்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ்சன் சௌதரி புதனன்று ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வில், அப்பகுதியில் அனு மதியின்றி செயல்படும் சிறிய அளவி லான கை சாய/சலவை பட்டறைகள் சட்டத்திற்குப் புறம்பாக சாயப் பணி களை மேற்கொண்டு வந்தது கண்டறி யப்பட்டது. இவை கழிவுநீரை முறை யாகச் சுத்திகரிக் காமல், நேரடியாக வும், மறைமுக மாகவும் அருகி லுள்ள சாக்கடைக் கால்வாயில் வெளியேற்றிய தாக இரண்டு தொழிற்சாலை கள் அடையாளம் காணப்பட்டன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யத்தின் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த இந்த சிறிய கை சாய/சலவை  பட்டறைகளின் சிமெண்ட் தொட்டிகள் உடனடியாக இடித்து அகற்றப்பட்டன. மேலும், சாய மற்றும் சலவைத் தொழிற் சாலைகள் பூஜ்ஜியநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு (Zero Liquid Discharge) முறையைத் திறம்படப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது. கழிவுநீரை நீர்நிலைகளில் வெளி யேற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும், இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஆய்வின்போது, தொடர்புடைய துறை  அலுவலர்கள் உடனிருந்தனர்.