மயிலாடுதுறை நகரை ஈர்த்த “சாதி மறுப்பாளர்களின் பேரணி” 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அணிவகுப்பு
மயிலாடுதுறை, செப்.2 - மயிலாடுதுறையில் ஞாயி றன்று துவங்கிய தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் 5ஆவது மாநில மாநாடு திங்களன்று நிறை வடைந்தது. இந்நிலையில், அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சிறப்பு தலைவர் எஸ்.கே. மகேந்திரன், துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்களுடன் மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து 10 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று புறப்பட்ட, “சாதி மறுப் பாளர்களின் பேரணி” நடை பெற்றது. இப்பேரணி, பூக்கடைத்தெரு, கூறைநாடு, காந்தி ஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், மணி கூண்டு, பட்டமங்கலத்தெரு வழி யாக பொதுக்கூட்டம் நடை பெற்ற சின்னக்கடைத் தெரு வந்த டைந்தது. இசை நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம் தொடர்ந்து நாடகவியலாளர் பிரளயன் நாடகக் குழுவின் “மெய்” நாடகம், காம்ரேட் கேங்ஸ்டா கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி யுடன் பொதுக்கூட்டம் துவங்கி யது. பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி. சுகந்தி, துணைத் தலைவர் கே. சாமுவேல்ராஜ், திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் உரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர் கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். படைப்பாளிகளுக்கு பாராட்டு திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் இரா.சரவணன், இயக் குநர் தீபக், கலை இயக்குநர் கா. பிரபாகரன், ஆய்வாளர் கோ.ரகு பதி, இயக்குநர் தீபக், சிற்பி சரண்ராஜ், இயக்குநர் சாமுவேல் அற்புதராஜ், எழுத்தாளர் ஜூலி யஸ் வனத்தையன், நாடகவிய லாளர் பிரளயன், காம்ரேட் கேங்ஸ்டா கலைக்குழு ஆகியோரை பாராட்டி நினைவு பரிசினை தலைவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.