tamilnadu

img

வரத்து கால்வாய் அடைப்பால் வயல் வெளிகளில் தேங்கும் மழைநீர்

வரத்து கால்வாய் அடைப்பால்  வயல் வெளிகளில் தேங்கும் மழைநீர்

கள்ளக்குறிச்சி, அக்.23 – உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றி யத்திற்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தில் ஒவ்வொரு பருவ மழைக்கும் கிழக்குப் பகுதி வயல்வெளிகளில் மழை நீர் தேங்குகிறது. வரத்து அதிகம் உள்ள வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாலும், வயல்வெளி ஓடைகளை ஆழப்படுத்தாததாலும், ஒவ்வொரு பருவமழைக்கும் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அவல நிலை நீடிக்கின்றது. இது தொடர்பாக வேளாண்துறை அதிகாரி களை அணுகினால் “பொதுப்  பணித்துறை அதிகாரிகளைத் தான் நீங்கள் பார்க்க வேண்டும், அவர்கள்தான் ஆக்கிர மிப்புகளை அகற்றி வாய்க்கால் களை ஆழப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர். பொதுப் பணித்துறையோ “வட்டார வளர்ச்சி அலுவலரைத்தான் அணுக வேண்டும்” என்று விவ சாயிகளைத் தட்டிக் கழிக்கும் போக்கினை அதிகாரிகள் கடைப்பிடித்து வருகின்றனர். பருவமழை தொடங்குவதற்கு முன்னரே நட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  தற்போது இந்த வயல்வெளிகளில் உள்ள நீரினை வெளியேற்றுவதற்குச் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 20 நாட்களே ஆன பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதைக் காப்பாற்ற விவசாயிகள் வேதனையுடன் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.