ஆர். நல்லகண்ணுவுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக. 28 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை (ஆக.28) அறிவித்துள்ளார். நூறு வயதான ஆர். நல்லகண்ணு கடந்த வெள்ளிக்கிழ மை (ஆகஸ்ட் 22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்தார். முதலில் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலை யில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 48 மணிநேரத்தில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. உறவினர்களை அடையாளம் காணும் நிலையில் முன்னேற்றம் அடைந்தி ருந்தார். ஆனால் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட தால் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது” என்றார். தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல்நிலை குறித்து மக்கள் மற்றும் கட்சியினருக்கு தகவல் அளிப்ப தற்காக தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தொலைபேசியில் நல்ல கண்ணுவின் உடல்நிலை குறித்து உறவினர்களிடம் கேட்ட றிந்ததுடன், புதன்கிழமை நடிகர் சிவகார்த்திகேயன் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
கூமாப்பட்டி பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி! தமிழக அரசு ஒப்புதல்
சென்னை, ஆக. 28 - கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூமாப்பட்டி பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடை பெறும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசிடம் நிர்வாக ஒப்புத லுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு கூமாப்பட்டி யைப் பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் பலரும் கூமாப்பட்டி நோக்கிப் படையெடுக்க, அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அறிவுறுத்தி யது. மழைக்காலத்தில் மட்டும்தான் இப்பகுதி தண்ணீர் நிரம்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் என்று கூறப்பட்டது. மேம்பாட்டுப் பணிகள் இந்நிலையில், முதல்வரின் முந்தைய அறிவிப்பின் படி, பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சுற்றுச் சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், செல்பி பாயிண்ட் ஆகியவை அணையைச் சுற்றி அமைக்கப்பட உள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள் பூர்த்தியானால் கூமாப்பட்டி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாங்கண்ணியில் குளிக்கத் தடை
நாகப்பட்டினம், ஆக. 28 - வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எனவே, வேளாங்கண்ணியில் உள்ள கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடை பெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்வர்
சென்னை: மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தோழர் ஆர். நல்ல கண்ணு, விரைந்து நலம்பெற விரும்புவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், “உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘தகைசால் தமிழர்’ தோழர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து தோழர் முத்தரசனிடமும் - அமைச்சர் மா. சுப்பிரமணியனிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்” என்று தெரி வித்துள்ளார்.
கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரிய மனுதள்ளுபடி
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜோதி பாசு என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப் பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றி தழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காணமுடியாத நிலை ஏற் பட்டுள்ளது. ‘கூலி’ திரைப்பட த்தைவிட கேஜிஎஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள் ளன. ஆனால், அந்தப் படங் களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூலி திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கில் தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.