tamilnadu

img

ஆர். கருமலையான் பெல்ஜியம் பயணம்!

ஆர். கருமலையான் பெல்ஜியம் பயணம்!

புதுதில்லி, செப். 11 - பெல்ஜியம் தொழி லாளர் கட்சியின் அழைப்பில் பேரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி யின் மத்தி யக் குழு உறுப்பினர் ஆர். கரு மலையான்  நான்கு நாள் பயணமாக, வியாழனன்று (செப். 11) பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு புறப்பட்டுச் சென்றார். உலகின் பல்வேறு நாடு களில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி களின் அரசியல் கலந்தாய்வு மற்றும் கருத்து பரிமாற்றக் கூட்டம், பெல்ஜியத்தின் அஸ்தெந்து நகரில் செப்டம்பர் 12 அன்று மாலை நடைபெறுகிறது.  இதில், “போர்களிலும் நெருக்கடிகளிலுமான உலகம்; எதிர்ப்பலைகளும் மாற்றுகளுக்குமான உலகம் “(A World at War and in Crisis, A World of Resis tance and Alternatives) என்ற தலைப்பில் ஆர். கருமலையான் உரை நிகழ்த்த உள்ளார். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ள “ஒருங்கிணைப்பு திரு விழாவிலும் (ManiFiesta, the festival of Solida rity) பங்கேற்கும் கருமலை யான், செப்டம்பர் 16 அன்று தில்லி திரும்புகிறார்.