tamilnadu

பாலியல் புகார் கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை

பாலியல் புகார் கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, அக்.14- பாலியல் புகார் கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் அ.இளவரசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:  புதுச்சேரியில் அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவிகளை ஒரு சில பேராசிரியர்கள், ஆசிரி யர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெறுகிறது. இக்குற்ற சம்பவங்களி லிருந்து மாணவிகளை பாதுகாக்க பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் புதுச்சேரி மாநில குழு சார்பில் ஆட்சி யாளர்களிடம் பலமுறை மனு கொடுத்தும், அரசு செவி சாய்ப்பதில்லை. சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கிளையில் மாணவி ஒருவர் மீது பாலியல் குற்றம் செய்த பேராசிரியர் மாதவைய்யாவை பணிநீக்கம் செய்து, கைது செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களை காவல் துறையை ஏவி விட்டு பல்கலைக்கழக நிர்வாகம் அடக்குமுறை செய்து மாணவர்களை கைது செய்துள்ளது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியதாகும். ஏற்கெனவே, ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய பல்கலைக்கழக மாணவி கள் விடுதிக்குள் மது போதையில் நிர்வாண கோலத்தில் பேராசிரியர் ஒரு வர் நுழைந்துள்ளார். பல்கலைக்கழக வளாக அலுவலர்களிடம் மாணவிகள் புகார் கொடுத்தனர். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்காமல் குற்ற வாளிகளுக்கு ஆதரவளித்து மூடி மறைத்தனர். பல்கலைக்கழகங்கள் கல்வி வளா கங்களில் தொடர்ந்து மாணவிகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல் சம்பவங்களால் கல்வியும், எதிர்கால கனவுகளும் சீரழிக்கப்படுகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீதும், அதேபோல் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மீது புகார் அளித்தால் பாரபட்சம் இன்றி, சட்டரீதியாக விசாரித்து, பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். பாலியல் புகார் கமிட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.