tamilnadu

img

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் விழா

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின்  75வது பிறந்த நாள் விழா 

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

புதுச்சேரி, ஆக.4- புதுச்சேரி மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான என்.ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (ஆக.4) கதிர்காமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கொண்டாடினார். விழாவிற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் வாழ்த்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலம் முதல்வர் ரங்க சாமிக்கு தனது வாழ்த்துக் களை தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கைபேசி மூலம் வாழ்த்து தெரி வித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தார். புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதி காரிகள் உள்ளிட்ட திரளா னோர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர், உள்துறை அமைச்சர், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ட்விட்டர் மற்றும் கைப்பேசி மூலமாகவும் முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்துகளை தெரி வித்துக் கொண்டனர்