“முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்” நூல் வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள 'முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் ' எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (அக்.3) சென்னையில் நடைபெற்றது. மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நூலை வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கு.தமிழ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநிலக்குழு உறுப்பினர்கள் பத்ரி,சுவாமிநாதன்,மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
