கடைவீதியில் குவிந்த பொதுமக்கள்
நாமக்கல், அக்.19- தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, கடைவீதி பகுதியில் மக்கள் கூட்டம் களை கட்டியது. நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை திங்க ளன்று (இன்று) கொண் டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் பெரிய கடை, சின்ன கடை வீதி பகுதி யில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துணிக்கடைகள் மற்றும் 50க்கும் மேற் பட்ட இனிப்புக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் களைகட்ட துவங்கியது. கடந்த சில நாட்களாக தீபாவளி பண்டிகை என்பதே தெரியாத நிலையில், சனியன்று இரவு ராசிபுரம் கடை வீதி பகுதியில் தற்போது அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, சனியன்று கூடிய நாமக்கல் வாரச்சந்தைக்கு, எருமப்பட்டி, துறையூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற் றும் சேலம் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. உடல் எடைக்கு தகுந்தாற்போல ஆடுகள் விலையை வியாபாரிகள் நிர்ணயித்தனர். அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மொத்தம் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
