சாலையிலுள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிய பொதுமக்கள் கோரிக்கை
பாபநாசம், அக். 23- பாபநாசம் அடுத்த உத்தாணியில் தொடங்குகிற சுந்தரப் பெருமாள் கோவில் பை பாஸ் சாலையில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் வரிசையாக நிற்கும் பனை மரங்களை ரசிக்க முடியாதபடி பல பனை மரங்களில் கொடிகள் படர்ந்துள்ளன. இதில் கதண்டுகள் கூடு கட்டினால் கூட தெரியாது. இதே போன்று இந்தச் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் படுவதால் துர் நாற்றம் வீசுகிறது. சாலையோரம் செடிகள் மண்டி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதில் மூலிகைச் செடிகளை தவிர்த்து, இதர செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் இந்த பைபாஸ் சாலையிலுள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
