tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல்  செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் 

திருவாரூர். அக். 16-  திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுப்பட்ட வாகனங்கள் சட்டவிதிகளின்படி, மாவட்ட காவல்துறையால் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. அதேபோல் நடப்பு ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செய்திதாள்களில் அறிவிக்கப்பட்டபடி, புதன்கிழமை திருவாருர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஜெ.செட்ரிக் மேன்யுவல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது. இந்த வாகன ஏலத்தில் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி, தஞ்சாவூர். நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.  இந்த வாகன ஏலத்தில் மொத்தம் 11 நான்கு சக்கர வாகனங்களும், 90 இரண்டு சக்கர வாகனங்களும் ஏலத்திற்கு விடப்பட்டது. இவற்றின் ஆரம்ப விலை மோட்டார் வாகன உதவி பொறியாளர், தானியங்கி பணிமனை, தஞ்சாவூர் அவர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டதாகும். இந்த ஏலத்தில் 11 நான்கு சக்கர வாகனத்தில் 7 வாகணமும், 90 இரண்டு சக்கர வாகனத்தில் 86-ம் பொதுமக்களால் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மாவட்ட அளவில் ஹேண்ட் பால் போட்டி

பாபநாசம், அக். 16-  வருவாய் மாவட்ட அளவில் தஞ்சாவூரில் நடந்த ஹேண்ட் பால் போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில், இரண்டாவது முறையாக முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீன், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், உடற்கல்வி இயக்குநர் பாலச்சந்தர், உடற்கல்வி ஆசிரியர் செல்வக் குமார் ஆகியோர் பாராட்டினர்.