tamilnadu

பள்ளியில் சுற்றுச் சுவர் எழுப்ப பொதுமக்கள் வேண்டுகோள்

பள்ளியில் சுற்றுச் சுவர் எழுப்ப  பொதுமக்கள் வேண்டுகோள்

பாபநாசம், செப். 12-  பாபநாசம் அருகே, உத்தமதானபுரம் தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த மண்ணான, இந்த கிராமத்தில் அவரது நினைவு இல்லம் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது.  இந்த பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். இந்தப் பள்ளியின் பின் புறம் குளம் உள்ளது. குளத்திற்கும், பள்ளிக்கும் இடையே சுற்றுச் சுவர் இல்லாமல் உள்ள நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்றும், தற்காலிகமாக தரமான முறையில் முள் வேலி அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.