ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.26.50 லட்சம் நிதியுதவி வழங்கல்
கும்பகோணம், ஜூலை 6 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் கும்பகோணம் தலைமையகத்தில், பணியின் போது இறந்த 1 பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஓய்வுபெற்ற 43 பணியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயி ரம் வீதம், ரூ.26.50 லட்சத்திற்கான காசோலைகளையும் நிர்வாக இயக்குநர் கே.தசரதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர்கள் சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), சிவ சங்கரன் (கரூர்), சதீஷ்குமார் (திருச்சிராப் பள்ளி), ரவிக்குமார் (காரைக்குடி), முது நிலை துணை மேலாளர், (மனிதவள மேம் பாடு ராஜேந்திரன், துணை-உதவி மேலா ளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
‘சமூக நல்லிணக்க ஊராட்சி விருது’ பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஜூலை 6 - தஞ்சாவூர் மாவட்டத்தில், “சாதி பாகு பாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சி களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை யுடன் கூடிய “சமூக நல்லிணக்க ஊராட்சி விருது” வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பரிசுத் தொகை அரசு வழி முறைகளில் தெரிவித்துள்ள, உரிய செயல் திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவு களின் அடிப்படையில் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும். மேற்கண்ட விவரப் படி சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில், முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் வழங்கப்படு கிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை அணுகி, விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து, அதற்கான அனைத்து ஆவ ணங்களுடன் ஜூலை 10ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் இவ்வலுவலகத்தில் கிடைக்கு மாறு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.