tamilnadu

img

வாலிபர் சங்க தோழர் வைரமுத்து படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்க தோழர் வைரமுத்து படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் அரியாமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் வைரமுத்து சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.மகாதீர், கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் தினேஷ், தலைவர் சின்னத்துரை உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.