tamilnadu

img

தூய்மை பணியாளர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் மீதான  அடக்கு முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஆக. 21-  சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான போராட்டத்தில், காவல் துறையினரின் அத்துமீறிய அராஜகத்தை கண்டித்து, மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.  மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சார்பாக, உள்ளாட்சி சங்க மாவட்டப் பொருளாளர் மற்றும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவருமான ஜி. ரகுபதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் கஜேந்திரன் நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், தோழமை சங்க தலைவர்கள் ஏ.பி. தனுஷ்கோடி, டி.ஜெகதீசன், சந்திரசேகரன், கோவிந்தராஜ், சுதாகர், காளிமுத்து, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.