அடிமனைகளில் வசிப்போரின் வாடகை தொகை குறைப்பு தமிழக அரசுக்கு குத்தகை விவசாயிகள், பயனாளிகள் நன்றி!
சென்னை, பிப்.21 - அடிமனைகளில் வசிப்போரின் மாத வாடகையை பாதியாகக் குறைத்து அரசாணை வெளியிட் டுள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை சார்பில் 17.2.2026 அன்று அரசாணை 85-ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அடிமனைகளில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் பல ஆயிரக்கணக்கான பயனாளிகள் மாத வாடகை செலுத்தி வருகின்ற னர். அவ்வாறு வாடகை செலுத்தி வரும் பயனாளிகளின் வாடகை சுமையை குறைக்கும் வகையில், நடப்பில் உள்ள வாடகை தொகையை பாதியாக குறைத்து தீர்மானித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் கோரிக்கைகளை வலி யுறுத்தி 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கம்) நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது, பத்துக்கும் மேற்பட்ட கோரிக் கைகளை அப்போதைய அறநிலை யத் துறை ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ் அவர்களிடம் சமர்ப்பித்து இருந்தது. கோரிக்கைகள் குறித்து அவரு டன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் போது, கோரிக்கைகள் தொடர் பான “விரிவான அறிக்கை” ஒன்றை வாடகை நிர்ணய குழுவுக்கு வழங்கு மாறு ஆணையர் ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் அடிப்படை யில் 17.1.2022 அன்று விரிவான பல பக்க அறிக்கை ஒன்று வாடகை நிர்ணய குழுவுக்கு சங்கம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. அதில் அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ஏ அடிப்படையிலான அரசாணை 298/2010-படி தீர்மா னிக்கப்பட்ட அடிமனை வாடகைக்கு மாறாக, 2016 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு என்ற பெய ரில் பல நூறு மடங்கு வாடகை அதிரடி யாக கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டு இருந்தது. அது இப்பொழுது குறைக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த 0.1 விழுக்காடு என்பது தற்போது 0.05 விழுக்காடாக குறைக்க கோரியும், குத்தகை விவசாயிகளுக்கு அவர்க ளது உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காக (25%) குத்தகை தொகையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையோடு சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட வாரிசு தாரர் பெயர் மாற்றம், கொரோனா நோய் தொற்று கால வாடகை நிலுவை தளர்த்தல், குடியிருப்புக் கான அடிமனைகளை சரியாக அள விட்டு வாடகை தீர்மானித்தல், குடி யிருப்போடு சேர்ந்த வணிக பயன் பாட்டுக்கான வாடகையை மறு சீர மைத்தல், விவசாயிகளுக்கு RTR பதிவு வழங்குதல் உள்ளிட்ட கோரிக் கைகளில், அடிமனை பயனாளி களுக்கான வாடகையை பாதியாக தளர்த்தி தற்போதைய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசுக்கும், அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் பயனாளிகளின் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்வதோடு பிற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரசாணை 318-ஐ செயல்படுத்திட தமிழ்நாடு அரசின் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.