இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மகாராஷ்டிராவில் தீவிரமடையும் போராட்டம்
மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநி லத்தில் அண்மையில் நடைபெற்ற 2 நெடும்பயணங்கள் (பால்கர், நாசிக்) மற்றும் இதர முக்கிய விவசாயப் போராட்டங்க ளுக்குத் தலைமை தாங்கிய தலை வர்களுக்கு “விவசாயப் போராளி” விருதுகளை வழங்குவதற்காக மும்பையில் அகில இந்திய விவ சாயிகள் சங்கம் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, துணைத் தலை வர் அம்ரா ராம் எம்எல்ஏ, ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் தலை வர் ஜிதேந்திர சவுத்ரி (திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, மகா ராஷ்டிராவின் பல மாவட்டங்க ளைச் சேர்ந்த 200 விவசாயப் போரா ளிகளை கவுரவித்தனர். இதில் 98 வயதான மூத்த தலைவர் எல்.பி. தங்கர் மற்றும் 90 வயதான கம்லி பாய் பஹோடா (இவர் 2018 மற்றும் 2026 ஆகிய இரண்டு நெடும் பய ணங்களிலும் பங்கேற்றவர்) ஆகி யோரும் அடங்குவர். குறிப்பாக இந்நிகழ்வில், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர்கள் ஆவேசமாக உரை யாற்றினர். தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழு விய போராட்டங்கள் தொடங்கி யுள்ள சூழலில், மகாராஷ்டிரா முழு வதும் இந்தப் போராட்டம் தீவி ரப்படுத்தப்படும் என்று அகில இந் திய விவசாயிகள் சங்கம் அறிவித் துள்ளது என்பது குறிப்பிடத்தக் கது.
