தெலுங்கானா பாஜக தலைவர் கைது
தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி பகுதியில் நில விவ காரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ வெங்கட ரமண ரெட்டி - காங்கி ரஸ் தலைவர்களி டையே கடந்த இரண்டு நாட்களாக (பிப்., 20, 21) கடும் மோதல் போக்கு நீடித்து வரு கிறது. இந்த மோதல் சம்பவத்தில் கற்கள் வீசப்பட்டதில் காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் நிர் வாகியின் கார் அடித்து நொறுக்கப்பட் டது. இதனால் காமாரெட்டி, பான்ஸ் வாடாவில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது. இந்நிலையில், வன்முறை பதற்ற முள்ள காமாரெட்டி, பான்ஸ்வாடா பகு திக்கு தடையை மீறி செல்ல முயன்ற தெலுங்கானா பாஜக தலைவர் ராமச் சந்தர் ராவ் ஞாயிறன்று காலை கைது செய்யப்பட்டார். சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறி, காவல்துறையினர் தார்னாகாவில் உள்ள அவரது வீட்டி லேயே தடுத்து வைத்தனர். பாஜக தலை வர் ராமச்சந்தர் ராவ் மதம் சார்ந்த கருத்து களுடன் காமாரெட்டி, பான்ஸ்வாடா பகுதியில் வன்முறையை தூண்ட திட்ட மிட்டது அம்பலமானதால் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா காவல்துறை முன்னெச்சரிக்கை மேற்கொண்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
