states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

தங்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்று நினைக்கிறது பாஜக. சங்கராச்சாரியார் கங்கையில் புனித நீராடுவதைத் தடுத்தது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் சங்கராச்சாரியார் (அவிமுக்தேஸ்வரானந்த்) மீது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வருகின்றன.

மூத்த பத்திரிகையாளர் ரன் விஜய் சிங்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகளாவிய இறக்குமதி வரியை 10% லிருந்து 15% ஆக உயர்த்தியுள்ளார். சனியன்று காலை கோடி மீடியா ஊடகங்கள் 10% வரி (குறைப்பை) குறித்து மகிழ்ச்சியைக் கொண்டாடின. ஆனால் 15% ஆக உயர்த்தப்பட்ட போது, கோடி மீடியா ஊடகங்கள் மவுனமாகிவிட்டன.

மூத்த பத்திரிகையாளர் ரோகிபுஸ் ஜமான்

அசாமில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளனர். துப்ரி,  உரியாம்காட் ஆகிய பகுதிகளில் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. சுமார் 5,700க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், தங்கள் வாழும் இடங்களையும் இழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எழுத்தாளர் சுஹாசினி ஹைதர்

அமெரிக்காவின் தன்னிச்சையான இறக்குமதி வரிகளுக்குத் துணை போவதை இந்தியாவும் மற்ற நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களை ஏற்க அவை மறுக்க வேண்டும்.