அமெரிக்காவிற்கு விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா
அமெரிக்காவின் வடகிழக்கு மற் றும் நியூயார்க் நகரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்கு கோடிக்கணக்கான மக்கள் இயல்புநிலையை இழந்துள்ளனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரண மாக திங்கள்கிழமை நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “பய ணிகள், ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவிற்கு விமானங்கள் ரத்து செய்ய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணி களுக்குத் தேவையான அனைத்து உதவி களையும் எங்கள் குழுவினர் வழங்கு வார்கள்” என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
