அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வெறுப்பு அரசியலும் முறியடிக்கப்பட வேண்டும்!
தருமபுரி, பிப். 21- “மக்களைச் சுரண்டும் கார்ப்ப ரேட் கொள்கைகளையும், வெறுப்பு அரசியலைத் தூண்டும் இந்துத் துவ சக்திகளையும் வீழ்த்த, மார்க்சிய சித்தாந்தம் ஒன்றே சிறந்த ஆயுதம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். தருமபுரியில் வெள்ளியன்று நடைபெற்ற ‘சிவப்பு புத்தக தின’ வாசிப்பு மற்றும் தேர்தல் நிதி யளிப்புப் பேரவைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. சிசு பாலன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது: சிவப்பு புத்தகமும் மார்க்சியத்தின் தேவையும் “உலகெங்கும் பிப்ரவரி 21 ‘சிவப்பு புத்தக வாசிப்பு தினமாக’ கொண்டாடப்படுகிறது. 1848-இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளி யிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. முதலாளிகள் தொழி லாளர்களின் உபரி உழைப்பை எவ்வாறெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை மார்க்ஸ் கையும் களவு மாகப் பிடித்தார். மனித இனம் இருக்கும் வரை மார்க்ஸை யாரா லும் மறக்க முடியாது. சென்னை யில் மார்க்ஸ் சிலையை வடிவ மைத்த சிற்பி கூட, அந்த வரலாற் றைப் படித்த பின்னரே சிலை யினைச் செதுக்கியதாகக் கூறினார். அந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசிற்கு எமது நன்றிகள்.” ஆட்டம் காணும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கம் “இன்று அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆதிக்கம் ஆட்டம் கண்டுள்ளது. டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் நடவடிக்கைகள் வளர்ந்து வரும் நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை அடக்க நினைக்கும் அமெரிக்கா, காசாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்க ளைக் கொன்று குவிக்கத் துணை நிற்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை நாம் வலுப்படுத்த வேண்டியது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரம், பொதுச் சொத்துக்களைத் தனியார் கார்ப்ப ரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் நடவடிக்கையால் இந்தியாவின் சொத்தில் 40 சத விகிதம் வெறும் ஒரு சதவிகிதப் பணக் காரர்களிடம் மட்டுமே முடங்கி யுள்ளது.” உரிமைப் பறிப்பும் வெறுப்பு அரசியலும் “தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாகச் சுருக்கி, அவர்க ளின் அடிப்படை உரிமைகளை மோடி அரசு பறித்துள்ளது. 8 மணி நேர வேலை என்பதை நீட்டிக்க முயன்றபோது, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. 100 நாள் வேலைத் திட்டத்தைச் சீர்கு லைக்கும் கார்ப்பரேட் - இந்துத்துவா கூட்டணியை நாம் முறியடிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வினர் மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்துகின்றனர். மைக்கேல்பட்டி மாணவி விவகாரம் முதல் திருப்பூ ரில் உயிரிழந்தவர் விவகாரம் வரை அண்ணாமலை மற்றும் தமிழிசை போன்றோர் பரப்பிய பொய்கள் சிபிஐ விசாரணை மூலம் அம்பல மாகியுள்ளன. சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சா ரம் செய்து, ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டணியைத் தமிழ கத்தில் காலூன்ற விடாமல் தோற் கடிக்க வேண்டும்.” இந்நிகழ்வில் மாநிலச் செயற் குழு உறுப்பினர் செ. முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மூத்த தலைவர் பி. இளம் பரிதி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம். மாரிமுத்து, வி. மாதன், எம். முத்து, சி. நாகராசன், சோ. அருச்சுனன், ஆர். மல்லிகா, ஜி. சக்தி வேல், தி.வ. தனுசன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.