1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் கருப்புப் பெட்டி செயலிழந்தது எப்படி? அஜித் பவார் விமான விபத்து திட்டமிட்ட சதி - ரோகித் பவார் சரமாரி குற்றச்சாட்டு
மும்பை ஜனவரி 28ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் மகா ராஷ்டிரா முன்னாள் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரு மான அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அஜித் பவாரின் அண்ணன் மகனும், தேசி யவாத காங்கிரஸ் (சரத்) கட்சி யின் பொதுச் செயலாளர் ரோகித் பவார் எம்எல்ஏ குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஜனவரி 28 அன்று பாரமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஒரு திட்டமிடப்பட்ட சதி போன்று பல்வேறு சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விமானம் விபத்துக்குள்ளான பிறகு அதில் தொடர்ச்சியாக வெடிப்புகள் ஏற்பட்டன. பொது வாக ஒரு விமானம் விழுந்தால் ஒரே ஒரு முறைதான் தீப்பிடிக்கும் அல் லது வெடிக்கும். ஆனால் இங்கு அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந் தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விமானத்தில் விதிகளை மீறி கூடு தல் எரிபொருள் வைக்கப்பட்டி ருந்ததா? விமானத்தின் எரி பொருள் வெடித்தது என்றால், ஏன் இவ்வளவு அதிகமான எரிபொருள் நிரப்பப்பட்டது? என சந்தேகம் எழு கிறது. கருப்புப் பெட்டி சேதம் விமானத்தின் பின்பகுதி தீயில் கருகாத நிலையில், அங்கு வைக் கப்பட்டிருக்கும் கருப்புப் பெட்டி மட்டும் எப்படிச் சேதமடைந்தது? விபத்துக்குப் பிந்தைய தீயினால் கருப்புப் பெட்டிகளும் அழிந்து விட்டதாகக் கூறப்படும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் (AAIB) கண்டுபிடிப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும், கடு மையான அழுத்தத்தையும் தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்ட இரண்டு கருப்புப் பெட்டி களும் எப்படிச் செயலிழந்தன? ஆதாரங்களை அழிப்பதற்காக இது திட்டமிட்டு செய்யப்பட்டிருக்க லாம் என்ற சந்தேகத்தை எழுப்பு கிறது. விஆர்எஸ் - தெலுங்கு தேசம் தொடர்பு விபத்துக்குள்ளான விமா னத்தை இயக்கும் விஎஸ்ஆர் நிறு வனத்தின், இயக்குனரின் திரு மணத்தில் தெலுங்கு தேச தலைவ ரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தி னர், அவரது கட்சியினர் கலந்து கொண்டனர். ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் போது, இந்த விசாரணை எப்படிப் வெளிப்படையாக நடக் கும்? இந்த விமான விபத்து வழக்கில் அரசியல், வணிக ரீதியான இரண்டு கோணங்கள் உள்ளன. ஆயுட்காலம் விமானத்தின் என்ஜின் ஆயுட் காலம் முடிந்துவிட்ட போதிலும், அது தொடர்ந்து இயக்கப்பட்டுள் ளது. விமானத்தின் பராமரிப்புப் பதிவுகள் முறையாகப் பரா மரிக்கப்படவில்லை. மோசமான வானிலை மற்றும் குறைவான பார்வைத்திறன் இருந்தபோதும் விமானம் பறக்க அனுமதிக்கப்பட் டது ஏன்? என பல்வேறு சந்தே கங்கள் எழுகின்றன” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். அஜித் பவார் மகனும்... முன்னதாக, அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை முடியும் வரை ஒன்றிய விமான போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை பதவியிலி ருந்து நீக்க வேண்டும் என ரோகித் பவார் சனிக்கிழமை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதே போல 2 நாட்களுக்கு முன், அஜித் பவாரின் மகன் ஜெய் பவா ரும் விமான விபத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அஜித் பவார் விமான விபத்து தொடர்பான ரோகித் பவாரின் குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அர சியலில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.