tamilnadu

img

சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிரா முன்னாள் முதல மைச்சரும், “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி யின்  தலைவருமான சரத் பவார் எம்.பி.,  உடல்நலக் குறைவால்  மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். தீவிர நீர்ச்சத்து குறைபாட்டினால் ஞாயிற்றுக்கிழமை புனேயில் உள்ள  ரூபி ஹால் கிளினிக் தனியார் மருத்து வமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள் ளார். சரத் பவாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், 2 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என ரூபி ஹால் மருத்துவமனையின் தலைமை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பர் வேஸ் கிராண்ட் கூறியுள்ளார். முன்னதாக, பிப்., 8ஆம் தேதி உடல்  நலக்குறைவால் சரத் பவார் ரூபி  ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டு, வீடு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி னார் என்பது குறிப்பிடத்தக்கது.