தருமபுரியில் ரூ. 3.67 லட்சம் தேர்தல் நிதியளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில், தேர்தல் நிதி இரண்டாம் கட்டமாக ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 420, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
