ஹிஜாப்பிற்கு அனுமதி மறுத்த தனியார் பள்ளி மாணவி வேறு கல்வி நிறுவனத்தில் சேர உதவ தயார்
கேரள அரசு அதிரடி அறிவிப்பு
திருவனந்தபுரம் கேரள மாநிலம் கொச்சியின் பள்ளுருத்தியில் செயி ண்ட் ரீட்டா என்ற பெய ரில் கிறிஸ்துவ தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வாரம் 8ஆம் வகுப்பு படிக் கும் முஸ்லிம் மாணவி “ஹிஜாப்” உடை அணிந்து வந்துள்ளார். இது விதிகளுக்கு எதிரானது எனக் கூறிய பள்ளி நிர்வாகம், 13 வயது சிறுமி யான மாணவியை கண்டித்ததுடன், அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அடாவடியை உடனடி யாக அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன் னணி அரசாங்கம், மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு அனுமதிக்க வேண்டும் என செயி ண்ட் ரீட்டா பள்ளிக்கு உத்தரவிட் டது. மேலும் இந்த சம்பவம் தொடர் பாக மாநில கல்வித்துறையின் துணை இயக்குநரகம் பள்ளியில் விசாரணை நடத்தி கேரள அரசி டம் அறிக்கை அளித்தது. தொடர்ந்து முஸ்லிம் மாணவி யின் தந்தை,”ஹிஜாப் சம்பவத்திற் குப் பிறகு என் மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி யுள்ளார். அவள் திரும்பி பள் ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று தெளிவாக கூறிவிட்டாள். அத னால் அவளுடைய விருப்பத்திற்கு மதிப்பளிக்க முடிவு செய்தோம். இனிமேல் என் மகள் செயிண்ட் ரீட்டா பள்ளிக்குச் செல்ல மாட்டார்” என அவர் கூறி இருந்தார். இந்நிலையில், ஹிஜாப் தடை யால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவி வேறு எந்த கல்வி நிறுவ னத்திலும் சேர இருந்தாலும், அவ ருக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என அம்மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி சனியன்று கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கொச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தால் நடத்தப்படும் தனி யார் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவி, வேறு எந்த நிறுவனத்தி லும் சேர விருப்பம் தெரிவித்தாலும், அவரை அனுமதிக்க மற்றும் உதவ அரசு தயாராக உள்ளது. மாணவி அரசாங்கத்தை அணுகினால், அவர் சேர விரும்பும் எந்தப் பள்ளி யிலும் ஒரு சிறப்பு உத்தரவு மூலம் உடனடியாக சேர்க்கை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தின்படி, எந்த மாணவரும் படிப்புக்கான வாய்ப்பை இழக்கக் கூடாது. செயிண்ட் ரீட்டா பள்ளி சிறுமியை வேதனைப்படுத்தியுள்ளது. அச் சிறுமிக்கு ஏற்படும் எந்தவொரு மன அழுத்தத்திற்கும் பள்ளி நிர்வா கமே பொறுப்பு” என அவர் கூறி னார். அரசின் நிலைப்பாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு இதற்கிடையில் கேரள மாநில எதிர்க்கட்சிக் கூட்டணியான ஐக் கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் (IUML) ஹிஜாப் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி சனிக் கிழமை அன்று கூறுகையில், “கொச்சியில் மாணவி ஹிஜாப் அணிய தடை விதித்த பள்ளி நிர்வாகத்தின் முடிவு சகிப்புத்தன் மையின்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு ஆகும். கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் நடந்திருக்கக் கூடாத ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி எடுத்துள்ள நிலைப் பாட்டிற்கு நாங்கள் ஆதரவு அளிப் போம்” என அவர் கூறினார்.
