tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளர் பாலியல் சீண்டல் குற்றத்தில் கைது

விழுப்புரம், ஆக. 8- விழுப்புரத்தில் தனியார் உர நிறுவனத்தில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் (55) விழுப்புரம் முத்தம்பாளையம் புறவழிச் சாலை அருகில் தனியார் உர நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர் வேலை செய்து வரு கின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒரு வரிடம்  வியாழக்கிழமை (ஆக.7)  நிறுவனத்தின் உரிமை யாளர் அப்துல் ஹக்கீம் ஆபாசமாக பேசியதோடு, அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டுள்ளார். தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த நிறுவனத்திற்கு திரண்டு வந்து அப்துல் ஹக்கீமை மடக்கிப் பிடித்து வைத்து, நிறுவனத்தின் வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவரை போலீசார் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்துல் ஹக்கீம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 சொகுசு காரில் மது கடத்திய  இருவர் கைது

கடலூர், ஆக. 8 - புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கட லூர் கே.என்.பேட்டை பைபாஸ் சாலை அருகே போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சட்ட விரோதமாக 156 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சுரேஷ் மற்றும் உதய குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி சத்துணவு அரிசி கடத்தல் வழக்கில் 4 பேர் கைது

விழுப்புரம், ஆக. 8- செஞ்சி அருகே அரசு பள்ளி சத்துணவு திட்டத்திற்கு விநியோகம் செய்யக்கூடிய அரிசியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையிலான போலீசார் செஞ்சியை அடுத்த நரசிங்க ராயப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் வழிமறித்தனர். லாரியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இருந்து செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் விடுதிகளுக்கு சத்துணவு திட்டத்திற்கு விநியோகம் செய்து விட்டு வருவதாக கூறினர்.  செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து 50 கிலோ எடைகொண்ட 103 மூட்டைகளில் 5,150 கிலோ ரேசன் அரிசியை கொண்டு வந்து, இவற்றை 24 இடங்களில் விநியோகம் செய்து முடித்த நிலையில், மினி லாரியில் 50 கிலோ எடை கொண்ட 30 சாக்கு மூட்டைகளில் 1,500 கிலோ ரேசன் அரிசி மீதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை யில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மினிலாரி சென்று கொண்டிருக்கும் போதே சாக்கு மூட்டை களில் குத்தூசி மூலம் ஒவ்வொரு மூட்டையில் இருந்தும் 5 கிலோ முதல் 7 கிலோ வரை ரேசன் அரிசியை சேகரித்து, திருட்டுத்தனமாக சேகரித்த 1,500 கிலோ ரேசன் அரிசியை ஹோட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வட்டம் வி.சாலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் ஏதகுடி கிராமத்தைச் சேர்ந்த அர விந்தன், செஞ்சி வட்டம் மேலச்சேரி ராஜூ, கண்ண தாசன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிட மிருந்த ரேசன் அரிசி மற்றும் மினி லாரி ஆகியவற்றை பறி முதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.