குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரு நாள் பயணமாக செவ்வாயன்று (செப்.2) தமிழகம் வருகிறார். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத் தின் 10 ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தின ராக பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கு வதுடன், கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் வழங்க உள்ளார். தில்லியில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் செல்ல உள்ளார். முன்னதாக ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, செப். 2 ஆம் தேதி சென்னை நந்தம் பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்குத் திரும்ப உள்ளார்.