tamilnadu

img

வறுமையின் பிடியில் சிக்கிய விசைத்தறித் தொழிலாளர்கள் கிட்னியை விற்ற பின்னரும் தொடரும் அவலம்

வறுமையின் பிடியில் சிக்கிய விசைத்தறித் தொழிலாளர்கள் கிட்னியை விற்ற பின்னரும் தொடரும் அவலம்

நாமக்கல், ஆக.1 - வறுமையின் காரணமாக கிட் னியை விற்பனை செய்த விசைத்தறி பெண் தொழிலாளர்கள், ‘எங்களின் வறுமை மட்டும் போகவில்லை; அரசு  உதவ வேண்டும்’ சிஐடியு சார்பில் நடை பெற்ற கூட்டத்தில் கண்ணீர் வடித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் விசைத்தறித் தொழி லில் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், கடந்த 30  ஆண்டுகளுக்கு மேலாகவே விசைத்தறி தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், இடைத்தர கர்கள் மூலமாக தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, அவர்களுடைய கிட்னி விற்பனை  செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. தொழி லாளர்களின் வறுமையை பயன் படுத்தி, இடைத்தரகர்கள் மூளைச் சலவை செய்து கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் தற்போது பூதா கரமாக எழுந்துள்ளது. இதுகுறித்து  மருத்துவக் குழுக்கள் அமைக்கப் பட்டு தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிஐடியு ஆலோசனைக் கூட்டம் இந்நிலையில், கிட்னி விற்பனை செய்த விசைத்தறி பெண், ஆண் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்ட கூட்டம் பள்ளி பாளையம் சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று மாலை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்ட உதவிச்  செயலாளர் கே.குமார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, ஒன்றியச் செயலாளர் லட்சு மணன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம் அசோகன், மாவட்டத் தலைவர் கே. மோகன் ஆகியோர், விசைத்தறி தொழிலாளர்களின் இன்றைய வாழ் வாதார சூழல் குறித்தும், கிட்னியை விற்ற தொழிலாளர்களின் தற்போ தைய நிலை குறித்தும் எடுத்துரைத்த னர். துரத்தும் வறுமை அப்போது கூட்டத்தில் பேசிய  பெண் தொழிலாளர்கள், “கடுமை யான வறுமையின் காரணமாகவே எங்கள் உடலில் உள்ள மிக முக்கிய மான பாகமான கிட்னியை விற்பனை  செய்தோம். ஆனாலும், தற்போது வரை வறுமையில் வாடி வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கிட்னி கொடுத்ததற்காக எங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்  வரை வழங்கப்பட்டது. கிட்னி கொடுத்த  சில ஆண்டுகளுக்கு எவ்வித பிரச்ச னையும் இல்லாமல் இருந்தது. தற் போது உடல் பலவீனமான நிலையில்,  அன்றாட பணிகளை செய்ய முடியாத  நிலை உள்ளது” என்றனர்.  மரணத்தின் விளிம்பில் ஒரு பெண் தொழிலாளியின் வேதனை நிறைந்த வார்த்தைகள்: “எங்களில் ஒரு பெண்மணி மிகக்  குறைந்த வயதில் கிட்னி விற்பனை செய்தார். தற்போது அவருக்கு 35 வயதுதான் ஆகிறது. பல்வேறு உடல்நலப்பிரச்சனை காரணமாக மற்றொரு கிட்னியும் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்து வர்கள் கூறுவதாக எங்களிடம் வேத னையுடன் தெரிவித்துள்ளார்”.  “குடும்ப வறுமையின் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளால் வேறு வழியின்றி கிட்னி விற்பனை செய்த  நாங்கள், தற்போது அதே வறுமை தொடரும் நிலையில், அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறோம்”. மருத்துவ அலட்சியம் தொழிலாளர்களின் கொதிக்கும் குற்றச்சாட்டு: “கிட்னி விற்பனை செய்ததால், உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு, உரிய மருத்துவ வசதியும்  கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம்.  மருத்துவமனைகளில் உடல் உபா தைகள் குறித்து கூறினாலும், ‘நீ கிட்னி கொடுத்ததால் தான் உனக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படு கிறது’ என மருத்துவர்கள் அலட்சிய மாக பதிலளித்து அனுப்பி விடுகின்றனர்”. “மேலும், ‘இதற்கெல்லாம் எங்க ளிடம் மருந்து மாத்திரைகள் இல்லை’  எனவும் கூறுவதால், என்ன செய்வ தென்றே தெரியாமல் தவிப்புக்குரிய நிலையில் உள்ளோம்.  அரசிடம் கோரிக்கை கிட்னி கொடுத்த பெண்களில் பெரும்பாலானோருக்கு கணவர் இறந்து இருப்பார்; அல்லது தனித்து வாழும் பெண்ணாக இருப்பார்; அல்லது குடும்பத்திலுள்ள கணவர்,  குழந்தைகள் பல்வேறு உடல்நல  பிரச்சனைகளால் பாதிப்புக்குள்ளான வர்களாக இருப்பார்கள். “வறுமையின் காரணமாகவே வேறு வழியின்றி நாங்கள் கிட்னியை  வழங்கிவிட்டோம். எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு  கிட்னி கொடுத்தவர்களின் மறுவாழ்வுக் காக பிரத்யேகமாக மாதாந்திர உதவித் தொகை, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என பெண் தொழி லாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர். சிஐடியு நிர்வாகிகளின் அறிவிப்பு இந்நிலையில் சிஐடியு நிர்வாகி கள் தெரிவித்ததாவது: “கிட்னி தானம் செய்த தொழி லாளர்களை திரட்டி அவர்களின் கருத்துக்களை தொடர்ந்து கேட்டறிந்து  வருகிறோம். கிட்னியை விற்பனை  செய்த அனைத்து தொழிலாளர் களின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சி யரை விரைவில் சந்தித்து மனு வழங்க வுள்ளோம். கிட்னி கொடுத்த தொழிலா ளர்கள் நோய் பாதிப்புகளால் அல்லல் பட்டு வரும் நிலையில், அவர்களுக் கென மருத்துவக்குழு அமைத்து, மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்” என சிஐடியு தலை வர்கள் கூறினர். - எம்.பிரபாகரன்