ரூ. 3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு: விநியோகத்தை முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை, ஜன. 8 - தமிழ்நாடு முழுவதும் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆலந்தூர் நசரத்புரம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு, வேட்டி - சேலை மற்றும் ரூ. 3000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாவட்டங்கள் தோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநி யோகம் துவங்கியது. பரிசுத் தொகுப்பு வழங்கலை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
