புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கவிதை நூல் வெளியீடு
புதுக்கோட்டை, அக். 6- புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் எழுதிய “அன்பின் அலெக்ஸா’’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி பெற்றுக் கொண்டார். அகநி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் நா. முத்துநிலவன் தலைமை வகித்தார். வேளாண் விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், கவிஞர்கள் ஆங்கரை பைரவி, அண்டனூர் சுரா, மு.கீதா, யாழி கிரிதரன், கஸ்தூரி ரெங்கன், ஸ்டாலின் சரவணன், ரேவதி ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
