tamilnadu

திருச்சி மத்திய சிறைச்சாலை முன்பு கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19- திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை கைதிகள் பல்வேறு  கைத்தொழில்களில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். மேலும் நன்னடத்தை அடிப்ப டையிலான கைதிகள் மூலம் சிறைக்கு வெளியே அதன் வளாகத்தில் பிரியாணி, சிக்கன் 65 கடைகள் நடத்தப்படுகின்றன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அங்கே கைதிகள் மூலமாக வளர்க்கப்படும் ஆட்டு இறைச்சியும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது சிறைத் துறை மூலமாக பெட்ரோல் பங்க் அமைக் கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட கைதிகள் சுழற்சி முறையில் பணியமர்த்தப் படுகிறார்கள். இந்த பெட்ரோல் பங்கை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் டிவிசன் அதி காரி கார்த்திக் மற்றும் சிறைத்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் சிறை முன்பும் கைதிகளால், பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.