tamilnadu

img

நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் பிரச்சனைகளைப் பேச கோரிக்கை மயிலாடுதுறை எம்.பி.யிடம் மனு

நாடாளுமன்றத்தில்  மாற்றுத் திறனாளிகள் பிரச்சனைகளைப் பேச கோரிக்கை மயிலாடுதுறை எம்.பி.யிடம் மனு

மயிலாடுதுறை, ஜூலை 15-  மயிலாடுதுறையில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதாவிடம், வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளிகள் பிரச்சனைகள் குறித்து உரையாற்றக்கோரி, சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. கணேசன், மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  என்.பி.ஆர்.டி தீர்மானத்தின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் சந்தித்து மனு கொடுப்பது என்ற அடிப்படையில் மனு அளித்ததாகவும், மனுவை படித்துப் பார்த்த எம்.பி, கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் பேசுவதாகக் கூறியதாகலும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.