tamilnadu

img

கோவிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த கோரி எம். சின்னதுரை எம்.எல்.ஏ.விடம் மனு

கோவிலை அறநிலையத்துறையே ஏற்று  நடத்த கோரி எம். சின்னதுரை எம்.எல்.ஏ.விடம் மனு

பொன்னமராவதி, ஜூலை 13-  பொன்னமராவதி தாலுகா மறவாமதுரை வட்டம் சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு வரி வசூல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சம உரிமை வேண்டும். கோவிலை இந்து சமய அறநிலைத் துறையே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கே.பழனிவேல் தலைமையில், தேவேந்திர குல வேளாளர் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையை சந்தித்து மனு அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சலோமி, மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாண்டிசெல்வி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுசீலா ஆகியோர் உடனிருந்தனர்.