tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி, செப்.19- நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க  வனத்துறையினர் அனுமதி வழங்கினர். கொடைக்கானல் மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்த  கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் புதன், வியாழக்கிழமைகளில் சுற்றுலா பயணி கள் குளிக்க தடை விதித்தனர். வெள்ளிக்கிழமை காலை யில் அருவியில் நீர்வரத்து சீரானது. அதனைத் தொடர்ந்து  சுற்றுலா பயணிகளை குளிக்க வனத்துறையினர் அனு மதித்தனர்.  

அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

திருவில்லிபுத்தூர், செப்.19- திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறையில்  கருத்தரங்கம் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் சுப.சரவணன் தலைமை  வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ரவி வாழ்த்துரை  வழங்கினார். தமிழ்த் துறை பேராசிரியர் பா.கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை  ஆற்றினார். மன்னர் துரைசிங்கம்  அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர் ஆ.பாண்டி இலக்கி யத்தில் சமூகநீதி என்ற தலைப்பில் பேசினார். இதில் அலமேலு மங்கை, திருப்பதி குமாரி, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சட்ட நாதன் நன்றி கூறினார்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 101வது நிறுவனர் தின விழா

திருவில்லிபுத்தூர், செப்.19- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவர் “கல்வி வள்ளல்” டி. கலசலிங்கத்தின் 101வது  பிறந்த நாள் விழா, வேந்தர் டாக்டர் கே.ஸ்ரீதரன் தலைமை யில் நடைபெற்றது. இணை வேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலை வர்கள் எஸ்.சசி ஆனந்த், எஸ். அர்ஜுன் கலசலிங்கம், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசு தேவன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாணவர் நல  இயக்குநர் எஸ்.பி. பாலகண்ணன் வரவேற்றார். விழாவில் 284 மாணவர்களுக்கு கல்விச் சாத னைக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. மேலும், 169 பேராசிரியர்களுக்கு மொத்தம் ரூ.33  லட்சம் மதிப்பிலான ஆராய்ச்சி ஊக்கத் தொகை ரொக்கப்  பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இன்னிசை, பாரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். ஆராய்ச்சி துறை இயக்குநர் எம்.பள்ளிகொண்ட ராஜ சேகரன் நன்றி தெரிவித்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு  ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி

தேனி, செப்.19- தமிழ்நாடு  ஆதிதிரா விடர் வீட்டுவசதி மற்றும்  மேம்பாட்டுக் கழகம் மூல மாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஜெர்  மன்  மொழி  தேர்வுக்கான  பயிற்சி அளிக்கப்படவுள்ள தாக மாவட்ட ஆட்சியர் ரஞ் ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இப்பயிற்சிக்கு   பி.எஸ்.சி.   நர்சிங், பொது  நர்சிங்,  மருத்  துவ  டிப்ளமோ, பி.இ.  (மெக்கானிக்கல் இன்ஜினிய ரிங், பயோமெடிக்கல் இன்ஜி னியரிங், மின் மற்றும் மின் னணு பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்  டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் ளும் இருக்க வேண்டும். இப்  பயிற்சிக்கு  கால அளவு 9 மாதம்.  மேலும் விடுதியில்  தங்கி  படிப்பதற்கான செலவி னத் தொகை தாட்கோவால்  வழங்கப்படும். இப்பயிற்சி முடித்த வுடன் தகுதியான நபர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தின்  மூலமாக தேர்வு  செய்யப்பட்டு, அந்நிறுவனத்  தின் சார்பாக ஜெர்மனி நாட்  டில் பணிபுரிய   (ஆரம்ப  கால  மாத  ஊதியமாக ரூ. 2,50,000 முதல் ரூ.3,00,000 வரை) வேலை  வாய்ப்பு  ஏற்  படுத்தி தரப்படும். இப்பயிற்சியினை பெற  தாட்கோ இணையதளமான  (www.tahdco.com)  என்ற  முகவரியில்  விண்ணப்பிக்க லாம்.     மேலும், கூடுதல்  விவ ரங்கள் அறிய  மாவட்ட மேலா ளர்,  தாட்கோ, அறை  எண். 73,  மாவட்ட ஆட்சியர் அலு வலகம்,  தேனி என்ற முக வரிக்கு நேரில் அல்லது 94450 29480 என்ற கைபேசி  எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கலை இலக்கிய இரவு

திருவில்லிபுத்தூர், செப்.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில்  கலை இலக்கிய இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க கிளைத் தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் தனலட்சுமி முன்னிலை  வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந் தன் கலை இலக்கிய இரவைத் தொடங்கி வைத்தார். புயல் கலைக்குழுவின் பாடகர்கள் மரிய டேவிட், மதுரை  பாண்டி பாடல்கள் பாடினர். கலைக்குழுவினர் நாடகங் களை அரங்கேற்றினர். மேலும், மார்க்ஸ் கான், மெர்சிகா, ஜெய வர்த்தினி உள்ளிட்டோர் சிலம்பம், யோகாவில் தங்கள் திற மைகளை வெளிப்படுத்தினர். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர் வேலாயுதம், மணிமாறன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், ஓய்வு பெற்ற பேரா சிரியர் சுரேஷ் தளியத், மக்கள் சேவை மைய நிர்வாகி பால கிருஷ்ணன், சிஎஸ்ஐ சபை குழுத் தலைவர் பால் தின கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக, சங்க  கிளை பொருளாளர் மரிய டேவிட் நன்றி கூறினார்.

கம்பம்மெட்டு மலைச்சாலையில்  கேரள கழிவுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கம்பம், செப்.19- தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையாக கம் பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. தமிழக எல்லை அருகில் உள்ளதால் கேரளப்  பகுதியில் இருந்து இரவு நேரங்களில் குப்பைகள் தமிழக வனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கம்பம்மெட்டு மலையடி வாரத்தில் உள்ள புதுக்குளம் பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மூட்டை மூட்டையாக குப்பை கள் கொட்டப்பட்டன. தகவலறிந்த மதுரை  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையில் ஆய்வு நடத்தப்பட் டது. அப்போது எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கழிவுகள் இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து புதுப்பட்டி பேரூராட்சி  சார்பில் அந்தக் குப்பைகள் அகற்றப்பட்  டன. தொடர்ந்து மதுரை மாசுக்கட்டுப்  பாட்டு வாரிய உதவி பொறியாளர் காரு ண்யாராஜா, தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கவிதா ஆகி யோர் தலைமையிலான குழுவினர் கம்பம்  மெட்டு சோதனைச்சாவடியில் வாகனங் களை பரிசோதித்தனர். இனிமேல் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களையும் சோதித்த பின்பே, தமிழகத்துக்குள் அனு மதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சோத னைச்சாவடி அலுவலர்களுக்கு அறி வுறுத்தினர்.